
நவம்பரில் துவங்கும் பிரபாஸின் ஸ்பிரிட்
கடந்தாண்டு வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு காதல் இளைஞனாக நடித்திருந்தார் என்றாலும் ரசிகர்கள் அவரை அதிரடியான ஆக்சன் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அந்தப்படத்தின் ரிசல்ட் உணர்த்தியது. அடுத்ததாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் அப்படி ஒரு கமர்சியல் ஆக்சன் படமாகவே உருவாகி வருகிறது. இன்னொரு பக்கம் ஆதிபுருஷ் திரைப்படம் இதிகாச பின்னணியில் உருவாகி வருகிறது. இவைகள் தவிர புராஜெக்ட் கே என்ற சயின்ஸ் பிக்சன் படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் அதிரடி போலீஸ் அவதாரம் எடுக்க இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவை பிரபலமாக்கிய அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்தப்படத்தில் தான் பிரபாஸ் அதிரடியான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு வரும் நவம்பரில் துவங்கும் என சொல்லப்படுகிறது.