நிலவில் கால்வைத்த 3ஆவது மனிதர்… 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க – இளமை ஊஞ்சலாடுது!

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணத்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். இவர் தனது 93ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், அன்று தனது நீண்டகால காதலியை மணந்தார். 

ட்விட்டரில், ஆல்ட்ரின் தனது மனைவி டாக்டர் அன்கா ஃபௌருடன் இருக்கும் புகைப்படங்களை இன்று வெளியிட்டார். அதில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய விழாவில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா… பரபரப்பை கிளப்பியுள்ள ஜெலென்ஸ்கி!

“எனது 93ஆவது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷன் அமைப்பால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்டகால காதலரான டாக்டர் அன்கா ஃபௌரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில் நாங்கள் சிறிய தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்துகொண்டோம். ஓடிப்போகும் வாலிபர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம்” என்று முன்னாள் விண்வெளி வீரர் ஆல்ட்ரின் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவை ஆல்ட்ரின் பகிர்ந்ததில் இருந்து பகிரப்பட்டதிலிருந்து, 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும், 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது. கருத்துப் பிரிவில், பல பயனர்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். அதில், ஒருவர், “நீங்கள் நிச்சயம் சந்திரனுக்கு மேல்தான் தற்போது இருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக எழுதியுள்ளார். 

மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர், பஸ் ஆல்ட்ரின். நாசாவின் அப்பல்லோ 11 மிஷனின் மூன்று பேர் கொண்ட குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் இவர் மட்டுமே. நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரர், அவருக்கு அடுத்து 19 நிமிடங்களபின் ஆல்ட்ரின் பின்தொடர்ந்தார்.

மூத்த விண்வெளி வீரரான ஆல்ட்ரின், 1971இல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார்.1998 இல் ஷேர்ஸ்பேஸ் அறக்கட்டளையை நிறுவினார்.

மேலும் படிக்க | சோகமான 2023… ஆயிரக்கணக்காணோர் வேலையிழப்பு – இது வெறும் டிரைலர் தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.