நுவரெலியா நானுஓயா பகுதியில் நேற்று (20.01.2023) இரவு அதிவேகமாக பயணித்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்து சாரதியை இன்று(21.01.2023) கைது செய்துள்ளனர்.
62 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவு
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பேருந்து கவனக்குறைவாக செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதிவேகமாக சென்ற குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேரும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 53 பேரும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.