வடிவேலு டயலாக்கில் பதிலடி தந்த பிரியா பவானி சங்கர்

தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், சினிமாவில் இன்று வளர்ந்து வரும் நடிகையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பணத்துக்காக மட்டுமே நடிக்க வந்ததாக அவரே கூறியது போல் இணையதளங்களில் செய்திகள் பரவி சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ப்ரியா பவானி சங்கர், 'மாப்ள சொம்ப கொடுத்தா தான் தாலி கட்டுவாறாம் என்கிற மோடில் ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. முதலில் நான் கூறியதாக வெளிவந்த 'ஸ்டேமெண்ட் சர்ச்சை' குறித்து பேச வேண்டாம் என்று தான் இருந்தேன். அந்த தகவலின் நம்பகத்தன்மை தெரியாமல் பதிவிட்டு வருகின்றனர். முதலில் நான் அப்படி சொல்லவே இல்லை. அப்படியே நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது. பணத்திற்காக தான் அனைவரும் வேலை செய்கிறோம். ஒரு நடிகர்/நடிகையிடம் இருந்து வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கேவலமாக பார்க்கிறீர்கள்?. என் வழியில் நான் வேலை செய்கிறேன்' என தெளிவாக விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.