8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்… வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி


கிழக்கு லண்டனில் வசித்து வந்த பெண் ஒருவரை வில் ஆயுதத்தால் தாக்கி அவரது முன்னாள் கணவர் கொலை செய்யும் முன்னர் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் இருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

8 மாத கர்ப்பிணியாக இருந்தார்

8 மாத கர்ப்பிணியான அவரை காப்பாற்ற வாய்ப்புகள் இருந்தும் பொலிசார் தவறவிட்டதாக புதிய அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
35 வயதான சனா முஹம்மது சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்... வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி | London Woman Killed By Ex Husband With Crossbow

@mylondon

இவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த 51 வயதான Ramanodge Unmathallegadoo வில் ஆயுதத்தால் சனாவின் வயிற்றில் இலக்கு வைத்து தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த சனா பரிதாபமாக மரணமடைந்தார்.

ஆனால் அவரது பிள்ளை அறுவை சிகிச்சையின் ஊடான காப்பாற்றப்பட்டு, பிழைத்துக் கொண்டது.
கிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் பொது மருத்துவமனையில் முன்னர் நர்ஸாக பணியாற்றி வந்த Unmathallegadoo மீது 2019ல் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

இருவரும் முறைப்படி விவாகரத்து

மொரிஷியஸ் நாட்டில் பிறந்த இருவரும் 1999ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளும் போது சனாவுக்கு 17 வயது Unmathallegadoo-க்கு 31 வயது.
ஆனால் 2014ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

8 மாத கர்ப்பிணியான லண்டன் பெண்... வில் ஆயுதத்தால் முன்னாள் கணவரின் கொடுஞ்செயல்: அதிர்ச்சி பின்னணி | London Woman Killed By Ex Husband With Crossbow

@mylondon

மேலும், சனா மீதான வன்முறைக்கு Unmathallegadoo 2012 மற்றும் 2018ல் முயன்றுள்ளார்.
கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் Unmathallegadoo-க்கு தொடர்புடையதாக கருதப்படுபவை, சனாவின் குடியிருப்புக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

2012ல் ஒருமுறை பொலிசாரை அழைத்த சனா, தமது கணவருடன் தாம் பாதுகாப்பாக உணரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2014ல் இவர்கள் விவாகரத்து பெறவும், 2018 நவம்பர் மாதம் சனாவின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த Unmathallegadoo வில் ஆயுதத்தால் சனாவை தாக்கி கொலை செய்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.