ஜப்பானில் மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோபி நகரில் உள்ள மூன்றடுக்குமாடி கட்டிடத்தின், முதல் தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.