தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஏற்கெனவே அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
image
இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பை நீக்கி, Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து நவீன ஆயுதங்களுடன் மத்திய துணை ராணுவப் படையைச் (ணு பிரிவு) சேர்ந்த 6 வீரர்கள் இன்று முதல் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.
image
இதையடுத்து மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலை சென்னையில் கான்ஃபரன்ஸ் மீட்டிங் மூலம் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.