பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணாமலையா..? இதுக்கு இல்லையாமா எண்டு..!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் அவ்வப்போது அண்ணாமலையை வம்புக்கு இழுத்து ட்வீட் போட்டு வருகிறார். இதற்கு அண்ணாமலை எந்த விளக்கமும், பதிலடியும் கொடுக்காமல் கடந்து செல்கிறார். ஆனாலும், காயத்ரி அண்ணாமலையின் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து விமர்சித்து வரும் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் நிரந்தரமாக கட்சியில் இருந்து விலகியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காயத்ரி ரகுராமுக்கு திமுகதான் கொம்பு சீவி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதற்கு காயத்ரி ரகுராம் எந்த விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. இந்த நிலையில், அண்ணாமலை அவருக்கென்று தனி வார் ரூம் அமைத்து கட்சியில் ஆகாதவர்களை ஆடியோ, வீடியோ மூலம் சிக்க வைத்து வருவதாக காயத்ரி ரகுராம் கூறி வருகிறார்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி வைத்து அண்ணாமலையின் வார்ரூம் தன்னை பற்றி மோசமாக கருத்து தெரிவித்து வருவதாக காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ”

பிக்பாஸ் நிகழ்ச்சி வைத்து வார்ரூம் என்னை பற்றி மோசமாக கருத்து தெரிவித்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட முடிவு செய்ய முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சம் பிபி நிகழ்ச்சியில் போட்டியிட்டு வாக்குகளை பெற அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். ஒவ்வொரு நாளும் நிறைய கன்டென்ட். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் தயார். அண்ணாமலையின் வேண்டுகோளின்படி விஜய் டிவியில் பல பார்வையாளர்கள் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். நல்ல பொழுதுபோக்கு அண்ணாமலை இருக்கிறார்” என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

தினமும் அண்ணாமலையை காயத்ரி அசராமல் தாக்கி பேசி வரும் நிலையில் அதை கொஞ்சம்கூட சட்டை பண்ணாமல் இருக்கிறார் அண்ணாமலை. ”இதுக்கு ஒரே முடிவே இல்லையம்மா, கட்சியை விட்டு இடைநீக்கம் செய்ததில் இருந்தே அண்ணாமலையை நீயும்தான் குறை சொல்லி வர, ஆனா, அதனால எந்த பயனும் இல்ல” என்று நெட்டிசன்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.