வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசியவதாவது: 2015ம் ஆண்டுக்கு முன்பாக டில்லியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது. அப்போது மாணவர்கள் கொட்டைகள் அமைத்து, கல்வி கற்கும் நிலை இருந்தது.
ஆசிரியர்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தற்போது அனைத்து நிலையும் மாறியுள்ளது. ஆம்ஆத்மி ஆட்சி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது. உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் மாணவர்களின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் ஆசியர்களின் செயல்பாட்டை பாராட்டுக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் சதவிதமும் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலேயே ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்
நான் ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். அவர்களுக்கு டில்லி அரசின் ஆதரவும், நாட்டு மக்களின் ஆதரவும் இருக்கிறது. சிலர் இதனை அரசுக்கு ஏற்படும் செலவு என நினைக்கலாம்.

ஆனால், இது செலவு அல்ல ஒரு விதமான முதலீடு. நாம் ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள். நாம் சர்வதேச அளவில் உள்ள பள்ளிகளுடன் போட்டியிட வேண்டும்.
தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகள் தான் சிறந்தவை என்ற நிலை உருவாக வேண்டும் என்று விரும்பினோம். அது தற்போது நடந்துள்ளது. டில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற வேண்டும். நமது நாட்டில் தலை சிறந்த பள்ளிகள் இருந்தால் தான் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் இந்தியாவுக்கு கல்வி பயில வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement