சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ். கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இவரது மர்ம சாவு சர்ச்சைக்குள்ளானது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. […]
