விழுப்புரம் மாவட்டத்தில் சீர்வரிசை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் பகுதியில் சேர்ந்தவர் அப்துல்லா (25). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் மேலிடையாலும் பகுதியை சேர்ந்த லாலு பாஷா மகள் பிர்தோஸ்(22) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த பிர்தோஸ், கைக்குழந்தையுடன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பிறந்த குழந்தைக்கு பிர்தோஸ் வீட்டில் சீர்வரிசை செய்யாததால், மனைவியிடம் அப்துல்லா சீர்வரிசை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வேதனை அடைந்த பிர்தோஸ், குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கணவர் அப்துல்லாவை கைது செய்த போலீசார், மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.