சென்னை: அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் மொத்தம் ரூ. 1.25 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, அப்துல் சமது, சின்னப்பா, பூமிநாதன், \சதன் திருமலைகுமார், ரகுராமன் ஆகியோரும் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.
