10 நாட்களில் திருமணம்..அம்மா சொன்ன வார்த்தை..19 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு


தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் சமையல் கற்றுக்கொள் என்று தாய் கூறியதால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண்டித்த தாய்

திருநெல்வேலி மாவட்டம் கீழகோடன் குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 1ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

புதுப்பெண் கிறிஸ்டில்லா எப்போதும் செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த அவரது தாய், உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள் என்று தனது மகளை கண்டித்துள்ளார்.

இது கிறிஸ்டில்லா மேரிக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிறிஸ்டில்லா மேரி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் கிறிஸ்டில்லா மேரி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அவர் முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

10 நாட்களில் திருமணம்..அம்மா சொன்ன வார்த்தை..19 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு | 19 Year Old Bride Commits Suicide Mom Scold


சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கிறிஸ்டில்லா மேரி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணத்திற்கு 10 நாட்களே உள்ள நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.