24 வருஷமா அம்மா ஒரே தட்டில் சாப்பிட்டார்கள்! காரணம்.. மறைந்த தாயை நினைத்து உருகிய தமிழர்


என் அம்மா 24 ஆண்டுகளாக ஒரே தட்டில் சாப்பிட்டு வந்ததாக ஒரு நபர் பதிவிட்டு மறைந்த தனது தாயாரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

இது அம்மாவின் தட்டு

தமிழகத்தை சேர்ந்தவர் விக்ரம் புத்தநேசன். இவரின் தாய் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில் தாயாரை நினைவுகூர்ந்து விக்ரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது அம்மாவின் தட்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில்தான் சாப்பிட்டுவந்தார். இது ஒரு சிறிய தட்டு. இந்தத் தட்டை நானும், என் அண்ணன் பொண்ணும் மட்டுமே பயன்படுத்த அம்மா அனுமதிப்பார்.

எங்களைத் தவிர வேறு யாரையும் இந்தத் தட்டைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். இந்த தட்டு நான் 7-ம் வகுப்பு படித்தபோது அதாவது 1999-ம் ஆண்டு நான் வாங்கிய பரிசு. அதை நான் இப்போதுதான் என் சகோதரி மூலம் அறிந்துகொண்டேன்.

24 வருஷமா அம்மா ஒரே தட்டில் சாப்பிட்டார்கள்! காரணம்.. மறைந்த தாயை நினைத்து உருகிய தமிழர் | Son Emotional Post Demised Mother

twitter

மிஸ் யூ மா

என் அம்மா இந்த 24 வருடங்களும் நான் பரிசாக வாங்கிய இந்தத் தட்டில்தான் உணவு சாப்பிட்டிருக்கிறார். ஆனால் இதை என்னிடம் அவர் சொன்னதே இல்லை. மிஸ் யூ மா எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

இந்தப் பதிவுக்குப் பலர் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டுவருகின்றனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.