இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு! இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்


மிரிஹான பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நைஜீரிய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.01.2023) இடம்பெற்றுள்ளது.

செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜையே (40 வயது) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் வைத்து சிக்கிய சந்தேகநபர்

மிரிஹான – கங்கொடவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு! இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர் | Nigerian Man Arrest For Having Overstayed In Sl

இதன்போது மடிக்கணினி ரக கணினியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சந்தேக நபர் இன்று (23.01.2023) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.