திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது என்று கோவில் நிருவாகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் நாளை வரை அனுமதி சீட்டு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
