பிக்பாஸில் ஷிவினில் தோல்விக்கு ரசிகர்களே காரணம் : கமல்ஹாசன்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று (ஜன., 22) நடந்து முடிந்தது. இறுதிபோட்டியாளர்களான ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூவரில் ஷிவின் தான் ஜெயிப்பார் என ரசிகர்கள் பலரும் நினைத்தனர். அதற்கேற்றார்போல் தனியார் சேனல் உட்பட சில ஊடகங்கள் எடுத்த கருத்துக்கணிப்பிலும் ஷிவினுக்கு தான் நல்ல சப்போர்ட் இருந்தது. சோசியல் மீடியாக்களிலும் இளைஞர்கள் முதல் அனைவரது சப்போர்ட்டும் ஷிவினுக்கு தான் இருந்தது.

பொதுமக்கள் பலரும் ஷிவினை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து பாசம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் கிராண்ட் பினாலே மேடையில் கூட கமல்ஹாசன் மூவரில் யாருக்கு ஆதரவு என்று தனித்தனியாக கேட்க, ஷிவினை தான் பலரும் தேர்ந்தெடுத்தனர். இதன்மூலம் கிராண்ட் பினாலே மேடையிலும் ஷிவின் 'மக்களின் சாம்பியன்' என மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டார். உண்மை இப்படியிருக்க இறுதிக்கட்டத்தில் மூவரில் ஷிவின் எலிமினேட் செய்யப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

அதற்கு காரணம் கூறிய கமல்ஹாசன், 'உங்கள் அனைவரது மனதிலும் ஷிவின் தான் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை வெளிப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் அதை வாக்குகளாக போடவில்லை. அதனால் தான் ஷிவின் வெளியேற்றப்படுகிறார்' என்று சொன்னார்.

கமல்ஹாசனின் இந்த கருத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாததால் ஷிவினை 'பீப்பிள்ஸ் சாம்பியன், மக்கள் சாம்பியன்' என சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். தவறான தீர்ப்பை சொன்ன பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை மீம்கள் கிரியேட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.