சாலை விதியை மீறி வீடியோ எடுத்த பெண்ணுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்| A fine of Rs. 17 thousand was imposed on the woman who took the video in violation of the traffic rules

புதுடில்லி நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, ‘வீடியோ’ எடுத்த பெண்ணுக்கு, உத்தர பிரதேச போலீசார் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சமூகவலைதளங்களில் புகைப்படங்கள், கருத்துகளை பதிவிடுவது போல, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ எனப்படும் குறு ‘வீடியோ’க்கள் பதிவிடும் வழக்கம் இளைய தலைமுறையினர்மத்தியில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பெண்கள் போடும் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்த வகையில், உ.பி.,யின் காஜியாபாதை சேர்ந்த, வைஷாலி சவுத்ரி குடெயில் என்ற பெண், ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலமாக உள்ளார். இவரை, 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

இவர் சமீபத்தில் காஜியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு சாலையில் நின்றபடி வீடியோ பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

தேசிய நெஞ்சாலையில் இப்படி ஆபத்தான நிலையில் காரை நிறுத்தி, வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என பலர் பதிவிட்டனர்.

இதையடுத்து தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்த காஜியாபாத் போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய வைஷாலிக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த விபரத்தை, போலீசின் சமூக வலைதளத்தில் அவர்கள் பதிவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.