சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தமிழக அரசின் முத்திரையும் இடம்பெறாமல் […]
