அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழிலாளி முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் பெட்ரோல் பங்க்கில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் டகோனி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஜனவரி 17-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) 3 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் தாக்குதல் நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது.

அந்தப் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 67 வயது தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழிலாளி முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக்கொலை | Indian Origin Man Killed Robbery Us Petrol StationJagbani

67 வயதான பாட்ரோ சிபோராம் (Patro Siboram), கிழக்கு இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்தார் மற்றும் 1988-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

பாட்ரோ திங்கட்கிழமை இரவு ஷிப்டில் பணிபுரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முகமூடி அணிந்த மூன்று நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின்போது ​​கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை பிடிப்பவர்களுக்கு 20,000 அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும் என காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கண்காணிப்பு கமெராக்களில் இருந்த சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.