உலகம் முழுவதும் 6 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்பாடிஃபை..!

கூகுள், அமேசான், பேஸ்ஃபுக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

செயல்திறன்களை மேம்படுத்தும் முயற்சியாக, நிறுவனத்தில் உள்ள பத்தாயிரம் ஊழியர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிஃபை முடிவு செய்துள்ளது.

இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான தொகுப்பூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.