குறைந்த வயதில் விதவையான தாய்! மறுமணம் செய்து வைத்த மகன்… புகைப்படங்கள்


இந்தியாவில் தாய்க்கு மகன் மறுமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கணவர்

மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே (23). இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா (45) சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் வேதனை அடைந்தார்.

குறிப்பாக சுபநிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை.
இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், தாய்க்கு வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டார்.

குறைந்த வயதில் விதவையான தாய்! மறுமணம் செய்து வைத்த மகன்... புகைப்படங்கள் | Man Gets Widowed Mother Remarried Relationship

hindustannewshub

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்

அவர் தனது தீவிர முயற்சிக்கு பிறகு தாயை சமாதானம் செய்து அவரை மாருதி கன்வத் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார்.
ரத்னா கூறுகையில், ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை. எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை.

ஆனால் பல விஷயங்கள் குறித்து பேசிய பிறகு சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா என எனக்குள் நானே கேட்டு கொண்டேன். இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன் என கூறியுள்ளார்.  

குறைந்த வயதில் விதவையான தாய்! மறுமணம் செய்து வைத்த மகன்... புகைப்படங்கள் | Man Gets Widowed Mother Remarried Relationship

postsenSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.