ஜேர்மனியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்: 5 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு


ஜேர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர வலதுசாரி சதி செய்ததாக ஐந்து பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, இதில் சுகாதார அமைச்சரைக் கடத்தும் திட்டங்களை உள்ளடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சதித்திட்டத்தின் பேரில் சமீபத்திய மாதங்களில் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

ஜேர்மனியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்: 5 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு | Five Germans Charged Over Coup Plot Government

கோவிட்-எதிர்ப்பு நடவடிக்கைகளால் கடும் எதிர்ப்பை சம்பாதித்த சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் தீவிர வலதுசாரி குழுக்களால் குறிவைக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குற்றச்சாட்டுகள்

ஜனவரி 16 அன்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. உள்நாட்டு பயங்கரவாதக் குழுவை நிறுவியதிலிருந்து தேசத்துரோகச் செயலைத் தயாரித்தல் மற்றும் ஆயுதச் சட்டங்களை மீறியது வரையிலான பல குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்வதாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“வன்முறை மூலம் ஜேர்மனியில் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமைகளைத் தூண்டுவது… அரசாங்கத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கவிழ்க்கச் செய்வது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது தெரியவந்தது.

மேலும் விசாரணையின்போது, ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதை சந்தேக நபர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஜேர்மனியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்: 5 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு | Five Germans Charged Over Coup Plot GovernmentMichael Probst/AP

குழுவின் திட்டங்கள்

குற்றம் சாட்டப்பட்ட பெண், எலிசபெத் ஆர் என மட்டுமே அடையாளம் காணப்பட்டது. நவீன ஜேர்மன் அரசு முறையானது அல்ல என்ற நம்பிக்கையை மையமாகக் கொண்டு அவரே குழுவின் சித்தாந்தத்தை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

மாறாக, 19-ஆம் நூற்றாண்டின் ஜேர்மன் பேரரசுதான் நாட்டின் உண்மையான ஆட்சி முறை என்றும், எதேச்சாதிகார ஆட்சி முறை மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்றும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் கூறினர்.

அவர்களின் நம்பிக்கைகள் தீவிர வலதுசாரி Reichsbuerger (Reich யின் குடிமக்கள்) இயக்கத்துடன் ஒத்துப்போகின்றன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.