நீதிபதிகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் – கிரண் ரிஜிஜு

நீதிபதிகளையும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும் மக்கள் பார்த்துக்  கொண்டு இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற பார் அசோசியேசன் நிகழ்ச்சியில் உரையற்றிய அவர், அரசியல்வாதிகளைப் போல நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடவோ, பொதுமக்களின் பார்வைக்கு ஆளாவதோ இல்லை என்றாலும், தங்கள் செயல்பாடுகளால் பொதுமக்களின் பார்வைக்குள்ளாவதாகத் தெரிவித்தார்.

நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை பொதுமக்கள் பார்த்து கொண்டு இருப்பதாகக் கூறியுள்ள கிரண் ரிஜிஜு, இந்த சமூக ஊடக யுகத்தில் எதையும் மறைத்துவிட முடியாது,  என்றும் கூறியுள்ளார்.

கொலீஜியம் அமைப்பு மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே பிரச்சனை நீடித்து நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண்  ரிஜிஜூ இவ்வாறு பேசியுள்ளார் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.