இந்தியாவில் நிலுவையில் 4.90 கோடி வழக்குகள்: கிரண் ரிஜிஜூ தகவல்| There are 4.90 crore pending cases in India: Kiran Rijiju informs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாட்டில் தற்போது நிலவரப்படி, 4.90 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

latest tamil news

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்று நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.90 கோடியாக உள்ளது. அரசு மற்றும் நீதித்துறையின் ஒருங்கிணைந்த முயற்சி வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும். தொழில்நுட்பம் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

latest tamil news

நீதி தாமதம் என்பது நீதியை மறுப்பது என்று பொருள். இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க ஒரே வழி அரசும் நீதித்துறையும் ஒன்றிணைவதுதான். நீதிபதிகள் நியமனத்தில் அவர்களைப் பற்றி உளவுத்துறைகள் தரும் தகவல்களை வெளியிடுவது ஆபத்தானது. சரியான நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.