ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. பரபரப்பாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஆயிஷா ஒரு போட்டியாளராக பங்கேற்று தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் ஆயிஷா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தப் போவதாக அவர் முகத்தை மறைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்டோரியாகப் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு தன் காதலனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறார் எனப் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக நெற்றியில் குங்குமம் வைத்து ஆயிஷா பதிவிட்ட புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் பலரும் திருமணம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ஃபேமிலியிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களைச் சந்திக்க வரும் பிரீசிங் டாஸ்க் வரையில் ஆயிஷா போட்டியில் இருந்திருந்தால் அவருடைய வருங்கால கணவர் என்ட்ரியாகி சர்ப்ரைஸ் கொடுத்திருப்பாரோ என்னவோ!
யாராக இருக்கும் என சீரியல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்! பொறுத்திருந்து பார்க்கலாம்!