உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்காகப் புதிதாக பணம் அச்சடிக்க வேண்டி வரும்
என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு பணம் அச்சடித்தால் பொருள்களின் விலைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும்
என்றும், பணவீக்கம் மேலும் உயரும் என்றும் நிதி அமைச்சு மேலும்
தெரிவித்துள்ளது.
பணம் இல்லை
தேர்தல் செலவுக்காக ஆயிரம் கோடி ரூபாவைத் தேர்தல்கள் ஆணைக்குழு கோருகின்றது.
இதற்கும் பணமில்லை என்று அரசு கூறி வருகின்றது.
ஆனாலும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இதற்கான பணம்
ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.