தோட்டாவை நெஞ்சில் வாங்குவார்.! மன்னரின் புதிய ஓட்டுநராக நியமிக்கப்பட்ட கமிலாவின் மெய்க்காப்பாளர்


பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய தலைமை ஓட்டுநராக இருப்பவர் ராணி கமிலாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் ஆவார்.

புதிய தலைமை ஓட்டுநர்

பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியர்களின் சமீபத்திய மாற்றத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் (King Charles III) புதிய தலைமை ஓட்டுநர், ராணி கன்சார்ட் கமிலாவின் (Queen Consort Camilla) முன்னாள் மெய்க்காப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

20 ஆண்டுகள் அரச குடும்பத்தில் பணியாற்றிய மார்க் ஆண்ட்ரூஸ் (Mark Andrews), கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ராணி கமிலாவின் பொலிஸ் பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருந்தார்.

தோட்டாவை நெஞ்சில் வாங்குவார்.! மன்னரின் புதிய ஓட்டுநராக நியமிக்கப்பட்ட கமிலாவின் மெய்க்காப்பாளர் | King Charles New Head Driver Camillas Ex BodyguardGetty Images

இருப்பினும், சார்லஸின் தலைமை ஓட்டுநர் டிம் வில்லியம் ஓய்வு பெறுவதால், மார்க் ஆண்ட்ரூஸ் மன்னரின் தலைமை ஓட்டுநராக மீண்டும் அரச பணிக்குத் திரும்பினார்.

விசுவாசமானவர்

மார்க் ஆண்ட்ரூஸ் மீண்டும் பணியமர்த்தப்பட்டதைப் பற்றி முன்னாள் ஸ்காட் யார்ட் கமாண்டர் கூறுகையில், “அவர் அவர்களால் தெளிவாக நம்பப்படுகிறார் மற்றும் மிகவும் மதிக்கப்படுகிறார், அதேநேரம் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக முடிசூட்டு விழா வரவுள்ளது.” என்று கூறினார்.

தேவைப்பட்டால், குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக பாய்ந்துவரும் தோட்டாவையும் அவர் தனது நெஞ்சில் வாங்குவார் என்பதால், மார்க் ஆண்ட்ரூஸ் உண்மையிலேயே அரச குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்று அரச குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தோட்டாவை நெஞ்சில் வாங்குவார்.! மன்னரின் புதிய ஓட்டுநராக நியமிக்கப்பட்ட கமிலாவின் மெய்க்காப்பாளர் | King Charles New Head Driver Camillas Ex BodyguardGetty Images  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.