பாஜக எதிரணிக்கு அட்வைஸ் உடன்கூடிய எச்சரிக்கை விடுத்த பழ.நெடுமாறன்!

நாகை மாவட்டம் நாகூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்ஜிகே.நிஜாமுதீன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ; அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக ஆளுநர் செயல்பட கூடாது. தமிழக ஆளுநர் ரவி மீது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஆளுநராக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்று செயல்படும் ஆளுநர்கள் மீது இந்திய குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு போட்டியாக ஆளுநர்கள் தனி அரசாங்கத்தை நடத்த நினைத்து மாநில அரசுகளோடு போட்டி போடுவதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மாதக்கணக்கில் இழுத்தடித்து இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்க பழ.நெடுமாறன், தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பாஜகவிற்கு மாநில கட்சிகள், அகில இந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் பாஜக முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிய வேண்டும்

ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பாஜகவை எதிர்க்க கூடிய மாற்றுத்திட்டதை உருவாக்க முன்வரவில்லை என்று பழ.நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்துமதம் என்று சொல்லி வரும் பாஜக இந்தியாவை முழுவதுமாக இந்து நாடாக மாற்ற துடிக்கிறது என்று அவர் சாடினார். பாஜகவை எதிர்க்க, சிறபபான மாற்று திட்டத்தை எதிரணியினர் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

நிகழாண்டுக்கான (2023) தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சபை மரபை மீறி உரையாற்றியதாக, அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனா்ல் கோபமடைந்த ஆளுநர் ரவி, அவை நடவடிக்கைகள் முடிவதற்குள் சபையைவிட்டு வேகமாக வெளியேறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.