”பாஸ்வேர்ட் ஷேரிங் செய்தால் கட்டணம் கட்டாயம்” எப்போது முதல் தெரியுமா? – Netflix அதிரடி!

ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மிகவும் உறுதுதணையாக ஓ.டி.டி தளங்களே செயல்பட்டன. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு இவை ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவே இருந்தது. இதனால் ஓ.டி.டி. தளங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அந்தந்த நிறுவனங்களும் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தன.
குறிப்பாக அதிரடியாக விலையில் மாற்றம் செய்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஒரே நேரத்தில் ஓ.டி.டி. தளத்தை பயன்படுத்த முடியும் என பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், Netflix-ல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த நிறுவனம் மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை கொடுத்து சப்ஸ்கிரைபர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் ஒருவரது கணக்கில் 5 ப்ரோஃபைல் வரை சேர்த்துக்கொள்ளும் அம்சம் இதுநாள் வரை இருந்து வருகிறது. தற்போது அந்த வசதிக்கு முழுக்கு போடும் விதமான அறிவிப்பைதான் நெட்ஃப்ளிக்ஸ் விட்டிருக்கிறது. ஒருவரின் அக்கவுன்ட்டை வைத்து மற்ற நால்வர் பயன்படுத்தும் வகையில் இருந்த அம்சத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சப்ஸ்கிரைபரின் அக்கவுன்ட்டை நண்பரோ உறவினரோ அவர்களுடைய ஃபோன், டிவி உள்ளிட்ட எந்த சாதனத்தில் லாக் இன் செய்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் இறங்கியிருக்கிறது.
The End of Netflix Password Sharing Is Nigh - WSJ
இந்த திட்டத்தை ஏற்கனவே அர்ஜென்டினா, டொமினிகன் குடியரசு, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் கவுத்தமாலாவில் நடைமுறைப் படுத்தியுள்ளது. இதுபோக சில லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் செயல்படுத்தி இருக்கிறது. அதன்படி கணக்குதாரரை தவிர வேறு எவராவது நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுன்ட்டை லாக் இன் செய்தால் அதற்காக 3 டாலர் அதாவது 250 ரூபாய் வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகையால், இனி யாரும் தங்கள் நண்பரின் Netflix அக்கவுன்ட்டை பணம் செலுத்தாமல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணைக்கை அதிகபடியாக இருந்தாலும், அண்மையில் அதன் வாடிக்கையாளர்களை இழந்ததில் இருந்து இந்த மாதிரி பாஸ்வேர்ட் பகிர்வதை தடுப்பதன் மூலம் அதன் சப்ஸ்கிரைபர்ஸை தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் கையில் எடுத்திருக்கிறது.
முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் தொடங்கிய காலத்தில் இருந்தே பாஸ்வேர்ட் பகிர்வு என்பது ஒரு சிக்கலாகவே இருந்திருக்கிறது. இருப்பினும் 10 சதவிகித வாடிக்கையாளர்களை இழக்கும் வரை உணராமல் இருந்த நெட்ஃப்ளிக்ஸ் வருவாய் வீழ்ச்சியை ஈடுகட்ட பாஸ்வேர்ட் பகிர்வை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.
Netflix confirms it will soon block millions from password sharing -  Derbyshire Live
இதுகுறித்து பேசியிருக்கும் நெட்ஃப்ளிக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், “நெட்ஃப்ளிக்ஸின் சப்ஸ்கிரைபர்ஸை அதிகப்படுத்துவதன் புது முயற்சியில் ஒன்றுதான் இந்த பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை. அதன்படி பாஸ்வேர்ட் பகிர்வு விரைவில் முறியடிக்கப்படும்.” என்றுக் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாஸ்வேர்டு பகிர்வுக்கான கட்டண முறை உலக அளவில் ஒவ்வொரு நாடாக அமல்படுத்தப்பட்டு வருவதை போல, இந்தியாவில் அந்த நடவடிக்கையை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்த பாஸ்வேர்டு பகிர்வுக்கான 3 டாலர் செலுத்தும் (250 ரூபாய்) நடைமுறை நடப்பு நிதியாண்டின் முடிவான ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.