வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் மேயர், துணைமேயர் தேர்தல் இன்று(ஜன.,24) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார். தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் தேர்தலை நடத்த, தற்காலிக அவை தலைவராகவும் கவர்னர் நியமித்தார். இதையடுத்து டில்லி மாநகராட்சி அலுவலகத்தில் , பாஜ.,- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜன.,24) நியமன உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டார். அப்போது ஆம் ஆத்மி உறுப்பினர் முதலில் பதவியேற்றார். பின்னர் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்றார். இதையடுத்து டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது கடந்த முறை போல, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. எம்சிடி தலைமையகத்திற்குள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் மோதல் தடுக்கப்பட்டது.
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற, பிறகு நடைபெற இருந்த, மேயர், துணைமேயர் தேர்தல் இன்று(ஜன.,24) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் டில்லி மேயர் தேர்தல் எப்பொழுது தான் நடக்கும் என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement