வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீ நகர்: புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் தொடர்பான திக்விஜய் சிங்கின் கருத்தை நான் வரவேற்கவில்லை என காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் கடந்த செப்.,7 ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கினார். இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தது. தற்போது யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிட்னி பைபாஸ் நக்ரோட்டாவில் நடை பெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு காரணமாக, யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை வரும் ஜன., 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் நிறைவு பெறுகிறது.
நேற்றைய யாத்திரையின் போது திக் விஜயன் சிங் பேசுகையில், புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் உள்ளிட்டவைக்கு மத்திய பா.ஜ., அரசு எந்த ஆதாரங்களையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டு பேசியிருந்தார். இது சர்ச்சையானது.

இது ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் தொடர்பான திக்விஜய் சிங்கின் கருத்தை நான் வரவேற்கவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. தாக்குதல் குறித்து ராணுவ வீரர்கள் நிரூபிக்க அவசியமில்லை. ராணுவத்தினர் தங்களது கடமையை சரியாக செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தில், உண்மை எப்போதும் வெளிவரும். உண்மையை வெளிவராமல் மறைக்க முடியாது. நான் நேற்று காஷ்மீர் பண்டிட்களை சந்தித்தேன். அவர்கள் தாங்கள் அவமரியாதை செய்யப்படுவதாகவும், எங்களை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement