மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தை மார்பில் பச்சை குத்திய பிரபல நடிகர்..!!

இலங்கையின் கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்கத் துவங்கிய கஷ்ட காலத்திலும், சக கலைஞர்களுக்கு உதவி செய்தார் என்பது ஆச்சரிய வரலாறு. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத காரணத்துனால நாடகக் கம்பனில வேலைக்கு சேர்ந்தனர் எம்.ஜி.ஆரும் அவரோட அண்ணன் சக்கரபாணியும்.நாடக கொட்டகையில் துவங்கிய அவரது வள்ளல் தன்மை, தமிழக முதல்வராக கடைசி மூச்சு வரையிலும் தொடர்ந்தது. அவரது மரணத்திற்கு பின்னும் தொடர்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் “பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து 36 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றிருக்கிறார் எம்ஜிஆர் என்றால் மிகையல்ல. மக்கள் திலகம் எம்ஜிஆரை கடவுளாக நினைத்து வணங்கும் தமிழக மக்களை இன்றளவும் கிராமங்களில் உள்ளனர்.ஏழை மக்கள் பலர் எம்ஜிஆரின் உருவத்தை தங்கள் கைகளிலும் தங்கள் இதயங்களிலும் பச்சை குத்திக் கொள்வர்.

இந்த நிலையில் எம்ஜிஆரின் உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக வரையப்பட்டதா? அல்லது உண்மையிலேயே அவர் பச்சை குத்திக்கொண்டரா? போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். எனவே இது அந்த படத்திற்கான விஷாலின் கெட்டப் என எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.