யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை அசத்தும் வெளிநாட்டு பெண்


யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்று விஜயம் மேற்கொண்டார்.

ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை, நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை அசத்தும் வெளிநாட்டு பெண் | Foreign Woman In Agriculture Sector In Jaffna

இந்நிலையில் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கை செயற்பாடுகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதோடு மக்களின் வாழ்வாதார நிலை குறித்தும் அறிந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை அசத்தும் வெளிநாட்டு பெண் | Foreign Woman In Agriculture Sector In Jaffna

குறித்த விவசாயப்பண்ணையினால் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தமுடியுமென்றும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.