குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சிறுத்தை நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ராணுவ கல்லூரியையொட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ராணுவ கல்லூரிக்குள் நடமாடுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. வனத்துறைக்கு ராணுவ கல்லூரியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.