Thunivu: வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவரா ? செம ட்விஸ்ட்டா இருக்கே..!

சதுரங்கவேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் வினோத். தன் முதல் படத்திலேயே தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் என்றே சொல்லலாம். அதன் பின் அவர் இயக்கிய தீரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவ்விரு படங்களிலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மிகவும் தத்ரூபமாக எடுத்திருந்தார் வினோத். இதையடுத்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பான இயக்குனரான வினோத் அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

Varisu: தோல்வியை நோக்கி நகரும் வாரிசு..தளபதிக்கே இந்த நிலையா ?

அஜித்தை வைத்து நேர்கொண்டப்பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக உருவெடுத்தார் வினோத். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படத்தை தொடர்ந்து வினோத் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகின்றது. தனுஷ் அல்லது யோகி பாபுவை வைத்து வினோத் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. இடையில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து வினோத் ஒரு படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட தனுஷ் தான் வினோத்தின் அடுத்த பட ஹீரோ என முடிவான நிலையில் தற்போது கமலின் படத்தை தான் வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கும்
கமல்
அப்படத்தை முடித்த கையேடு வினோத் படத்தில் நடிப்பார் என பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.