இதைவிட என்ன பெரிய வெற்றி : விக்ரமன் நெகிழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரியான முதல் அரசியல்வாதி என்ற பெயருடன் விக்ரமன் தனது ஸ்டைலில் விளையாடி வந்தார். பைனலில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூவரில் விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நிச்சயமாக டைட்டில் பட்டத்தை கைப்பற்றுவார்கள் என்று மக்கள் அனைவரும் நம்பினர். ஆனால், மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் டைட்டில் பட்டத்தை வென்றார்.

இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் கமல்ஹாசனுக்கும் கடுமையான கண்டனங்கள் எழுந்ததுடன் 'பீப்பிள்ஸ் சாம்பியன் விக்ரமன்' என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த விக்ரமனுக்கு அவர் வாழும் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். தமிழகமெங்கும் மக்கள் பலரும் விக்ரமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள விக்ரமன், 'என்மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் காண்பித்த அன்புக்கு நன்றி. பொங்கல் கோலத்தில் கூட அறம் வெல்லும் என்று போட்டிருக்கிறீர்கள். இதைவிட பெரிய வெற்றி என்ன கொடுத்துவிட முடியும்?. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்' என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.