அண்ணாமலை வாழ்க எனும் திமுக அமைச்சர்கள்… என்ன சொல்றீங்க மிஸ்டர் ஹெச்.ராஜா?

தென்காசி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது,

பொங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க என்று முழக்கத்துடன் காலையில் எழுகின்றனர். ஏனென்றால் கரும்பு கொள்முதல் மூலம் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக ராஜா குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனவும், கடந்த 60 நாட்களில் 140 கொலைகள் நிக்ழ்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநரையே ஒருமையில் பேசிய முதல்வர் அதுகுறித்து வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில், இந்த அரசு எப்போது ஒழியும் என மக்கள் காத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

அமைச்சர் உதயநிதி, ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனையில் திருடிய செங்கலை முதலில் ஒப்படைத்துவிட்டு மற்றவை குறித்து பேசலாம் என்று ஹெச்.ராஜா கிண்டலாக கூறினார்.

மதுரை மாவட்டம் , தோப்பூரில் எ்ய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கட்டுமான பணிகள் திட்டமிட்டப்படி தொடங்கப்படவில்லை.

இதனை சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசையும், அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசையும் விமர்சிக்கும் விதத்தில் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் எ்ய்ம்ஸ் மருத்துவமனை என்று எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை காட்டி பிரசாரம் மேற்கொண்டார். அவரது அந்த பிரசார உத்தி பொதுமக்கள் மத்தியில் நன்றாக எடுப்பட்டது. இந்த நிலையில் எய்மஸ் மருத்துவமனையில் உதயநிதி செங்கல்லை திருடியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.