உக்ரைன் போரில் காணாமல் போன பிரித்தானியர்கள்: இறுதியில் வெளிவந்துள்ள பகீர் தகவல்


உக்ரைன் போரில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வந்த இரண்டு பிரித்தானியர்கள்  கிறிஸ்டோபர் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா உயிரிழந்து விட்டதாக (FCDO) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காணாமல் போன பிரித்தானியர்கள்

உக்ரைன்-ரஷ்யா போர் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி உதவி வருகின்றனர்.

அந்த வகையில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பொதுமக்கள் வெளியேற்றம் மற்றும் மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ பாக்ஷா(Andrew Bagshaw) மற்றும் கிறிஸ்டோபர் பாரி(Christopher Parry) ஆகிய இருவர் காணாமல் போகி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தது.

உக்ரைன் போரில் காணாமல் போன பிரித்தானியர்கள்: இறுதியில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | 2 Uk British Citizens Killed In Ukraine Russia War

இந்த ஜோடி கடைசியாக ஜனவரி 6 அன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கிராமடோர்ஸ்கை(Kramatorsk) விட்டு வெளியேறிய சோலிடார்(Soledar) நகரத்திற்கு சென்ற போது பார்க்கப்பட்டனர், பின்னர் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்ததாக அறிவிப்பு

இந்நிலையில்  முன்னாள் குடும்பம் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் கிறிஸ்டோபர் பாரி ஆகிய இருவரும் உக்ரைனில் உள்ள சோலேடரில் மனிதாபிமான வெளியேற்றம் என்று விவரிக்கப்பட்ட முயற்சியின் போது கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் காணாமல் போன பிரித்தானியர்கள்: இறுதியில் வெளிவந்துள்ள பகீர் தகவல் | 2 Uk British Citizens Killed In Ukraine Russia War

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பின் போது உக்ரைனுக்கு தன்னார்வல நடவடிக்கைகள் செய்வதற்காக அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அங்கு 400 க்கும் மேற்பட்ட உயிர்களையும் பல கைவிடப்பட்ட விலங்குகளையும் காப்பாற்றினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.