
சென்னையின் தனுஷின் ‛வாத்தி' இசை வெளியீட்டு விழா
தனுஷ் தெலுங்கு, தமிழில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித்தின் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 17 வெளியாக உள்ளது .
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த தனுஷ் திட்டமிட்டுள்ளார். சென்னை சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது .