`பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும்!' ஏன் தெரியுமா?

பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்துவந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும்.

இதேபோல் இன்னும்பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை!

‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்

சனிபகவான்

ஒருமுறை கோபம் கொண்ட திருமால், திருமகளை புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்கு தவம் இருந்து பலன் பெற்றாள்.

விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரின் ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இதுவாம்.

ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ருத்ரன், வேடுவனாக பிறக்கும்படி பிரம்மனுக்குச் சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்கு சாப விமோசனம் தரும்படி முருகனை பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார். இங்கே வேடர் கோலத்தில் அருளும் பிரம்மனைத் தரிசிக்க இயலும்.

பழநி

திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.