புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் திரையிட முயற்சி நடக்கிறது. இதனை தடுப்பதற்காக அங்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் சங்கத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆவணப்படத்தை பேஸ்புக் மூலம் திரையிட போவதாக மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதற்கு தடை விதித்த பல்கலை, அனுமதி பெறாமல் யாரும் கூடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆவணப்படம் திரையிடப்படுவதை தடுக்கும் பொருட்டு, வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கலவர தடுப்பு போலீசார் பல்கலை வாயில் அருகில் வாகனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
இது தொடர்பாக பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறுகையில், எஸ்எப்ஐ எனப்படும் ‘ இந்திய மாணவர் கூட்டமைப்பு’ ஆனது, பல்கலையில் நிலவும் அமைதியை கெடுக்க நினைக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. பல்கலை வளாகத்தில் நிலவும் அமைதியை கெடுக்க நினைத்தால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோன்று, நேற்று ஜவஹர்லால் நேரு பல்கலையில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, மின்சாரம் மற்றும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால், மாணவர்கள் லேப்டாப்கள் மற்றும் மொபைல்போன் மூலம் அந்த ஆவணப்படத்தை பார்த்தனர். பல்கலை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.
ஆவணப்படத்தை ஒளிபரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பல்கலை நிர்வாகம், இந்த ஆவணப்படத்தால் சமூக நல்லிணக்கம் கெடும் என எச்சரித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement