
வாணி ஜெயராம், கீரவாணி, ரவீனாவிற்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
புதுடில்லி: 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இசையமைப்பாளர், பாடகி,நடிகை உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி திரைப்பட நடிகை ரவீனா டான்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைசேர்ந்த பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது.