கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு மகன் இருக்கின்றார். கடந்த பத்து மாதங்களுக்கு முன் மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார்.
அவருக்கு சுரக்கின்ற தாய்ப்பாலை தன் குழந்தைக்கு போக மீதம் இருக்கும் மொத்த பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக அவர் 15 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளார்.
இவரது இந்த சேவையை பாராட்டும் விதமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளார் ஸ்ரீவித்யா.
இவரது தாய்ப்பால் தானத்தின் காரணமாக 2000 மேற்பட்ட குழந்தைகள் பலனடைந்ததாக கூறப்படுகிறது. இளம் வயதில் வித்யாவின் இந்த சேவை பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.