ஓசூர்: 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை

தமிழத்தில் குடியரசு தினமான இன்று புதிய சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்துள்ளனர். இந்த சாதனையை வெற்றிகரமாக செய்த மாணவர்களுக்கும், இதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா துவக்கி வைத்தார். இதில் 5 வயதுக்கு மேற்பட்ட 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். இறுதியில் தற்காற்பு கலைகளையும் செய்து அசத்தினர்.

இதனை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்ப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் உதய் மற்றும் ராஜேஷ் குமார் ஆசிய இருவரும் நடுவராக இருந்து மேற்பார்வை செய்தனர். 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

Hosur: School Students Create World Record in Silambam

சிலம்பம் தென்னிந்தியாவில் தோன்றிய இந்திய தற்காப்புக் கலையாகும். இந்த நடை பற்றி தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சிலம்பம் சங்கம் சிலம்பத்தின் அதிகாரப்பூர்வ சர்வதேச அமைப்பாக உள்ளது. சிலம்பம் நன்கு அறியப்பட்ட தற்காப்புக் கலையாகும்.

சிலம்பம் இதற்கான சிறப்பு ஆயுதங்கள், பொதுவாக மூங்கில் குச்சிகள் கொண்டு பயிற்சி செய்யப்படுகிறது. சிலம்பம் விளையாட்டின் ஆரம்பகால குறிப்புகள் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலம்பம் என்ற பெயரின் சொற்பிறப்பியல் “மலைகளில் இருந்த பணியாளர்கள்”, “சிலம்” என்றால் “மலைகள்” மற்றும் “கம்பு” என்றால் “தடி அல்லது குச்சிகள்”. பங்கேற்பாளர்களின் உயரத்திற்கு சமமான நீளம் கொண்ட மூங்கில் குச்சிகள் கொண்டு, கடினமான மேற்பரப்பில் இது பெரும்பாலும் விளையாடப்படுகிறது. இந்த தற்காப்புக் கலையில் மொத்தம் 18 விதமான ஃபுட்வொர்க்  உள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.