சிரேஷ்ட ஊடகவியலாளர்மொஹான் சமரநாயக்கவின் முறைப்பாட்டின்படி, விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் இருந்தபோதிலும் ஒரு அரச அதிகாரியின் கடமைகளில் தலையிடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.