'தலைக்கூத்தல்' வழக்கம் சரியா… தவறா… பேச வருகிறது ஒரு படம்

2018ம் ஆண்டு பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய 'பாரம்' என்கிற படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட்டில் முதியவர்களை கருணை கொலை செய்யும் 'தலைக்கூத்தல்' என்கிற வழக்கத்தை மையமாக கொண்டு உருவானது. அதன்பிறகு மதுமிதா இயக்கிய கே.டி என்கிற கருப்புதுரை படத்தில் சிறிய பகுதியாக இடம்பெற்றது. இப்போது இதே களத்தில் தலைக்கூத்தல் என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகிறது.

இதனை, லென்ஸ் என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஜெயபிரகாஷ் இயக்கி உள்ளார். ஒய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்துள்ளார், சமுத்திரகனி, வசுந்தரா, கதிர், வையாபுரி, முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இசை அமைக்கிறார், மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி ஜெயபிரகாஷ் கூறியதாவது: வயது முதிர்ந்தவர்களை சொந்த குடும்பத்தினரே கொல்லும் ஒரு பழக்கம் தென் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை பற்றி பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இது சரியா தவறா என்பதை விவாதிப்பதை விட, எந்த சூழலில் குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை யோசித்த போது நிறைய கேள்விகள் தோன்றின. இந்த கேள்விகளுக்கான விடையை தேடுவதே இந்த படத்தின் நோக்கம்.

நடுத்தர குடும்பம் ஒன்று இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அப்போது அந்த குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள், எவ்வாறு அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படம் விவரிக்கும். என்கிறார் ஜெயபிரகாஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.