புதுடில்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார்.
பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தாண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், கருப்பு, வெள்ளை உடை அணிந்த மோடி, பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு வண்ணங்கள் அடங்கிய ராஜஸ்தான் தலைப்பாதை அணிந்து பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார்.

குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு, கார் கதவை திறந்து நின்றபடி பார்வையாளர்களை நோக்கி இரு கைகளையும் அசைத்துவாறு சென்றார்.

ஜனாதிபதியின் புடவை
குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயில் பார்டர் வைத்த ஒடிசா புடவை அணிந்து வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement