பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பதான் படம் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் காணும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில் ஷாருக்கின் ‘பதான்’ படம் ஓப்பனிங் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
‘பதான்’: முதல் நாள் வசூல் நிலவரம்
பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பம்பர் அட்வான்ஸ் புக்கிங்கின் பெரும் பலனை ‘பதான்’ பெற்றுள்ளது. இதன் காரணமாக ஷாருக்கானின் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் களைக்கட்டி உள்ளது. வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கருத்துப்படி, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
‘பதான்’ படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் ரீதியாக அசத்தியுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் திரைப்படம் 50 கோடியும், 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 52 கோடியையும் வசூல் செய்தது. அந்த வகையில் பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது.
இதனிடையே ஷாருக்கான் 4 வருட இடைவெளிக்குப் பிறகு பதான் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால், இப்படத்திற்கான முன்பதிவுகள் அமோகமாக விற்று வருகிறது. அவர் கடைசியாக 2018 இல் வெளியான ‘ஜீரோ’ திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில், ஷாருக்கான் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை பெரிய திரையில் பார்த்து திருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.