அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து – பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி

பிக்பாஸ் சீசன் 6-ல் டைட்டில் பட்டத்தை அசீம் தட்டிச் சென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே விக்ரமன், ஷிவின் பிடித்தனர். என்னதான் அசீம் டைட்டில் பட்டத்தை வென்று, அதன் பரிசுத்தொகையை ஏழை மாணவர்களுக்காக கொடுத்திருந்தாலும் மக்கள் அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதேசமயம் விக்ரமன் மற்றும் ஷிவினுக்கு வெளியுலகில் நல்ல மதிப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள விக்ரமன் அசீமின் வெற்றி குறித்து முதல் முறையாக கமெண்ட் செய்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'மக்கள் தீர்ப்பிற்கும் இந்த ரிசல்ட்டிற்கு சம்மந்தமே கிடையாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் செல்போன் இருக்க வேண்டும், அதில் ஹாட் ஸ்டார் ஆப்பை பயன்படுத்தவும் அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம் செல்போன் கூட இல்லாத எளிய மக்கள். அவர்கள் எப்படி ஆன்லைனில் வாக்களிப்பார்கள்?. எனவே, மக்கள் ஆதரவிற்கு இந்த தீர்ப்பிற்கும் தொடர்பே இல்லை.

அதேபோல் அசீம் ஜெயித்தால் இந்த சமூகத்திற்கு ஒரு தவறான பிரதிபலிப்பை ஏற்படுத்திவிடும், அது ஆபத்து என்று நினைத்தென். அடாவடியாக, திமிராக மற்றவர்களை இழிவுப்படுத்தி விளையாடினால் தான் பிக்பாஸில் டைட்டில் வெல்ல முடியும் என மக்கள் நம்பிவிடக்கூடாது என்று பயந்தேன். ஆனால், அதுதான் வெட்டவெளிச்சமாக நடக்கிறது. இந்த வெற்றியோ, கோப்பையோ, பரிசோ உண்மை அல்ல என்பதை நீங்களும் நானும் நம்பவேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட அதைத்தான் நம்புகிறார்கள். அதனால் தான் என்னை இப்போது கொண்டாடுகிறார்கள்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.